நீரோடையில் துள்ளியபடி நீந்திச் செல்லும் மீன்களைப் பார்த்தால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் இல்லையா? உற்சாகத்துடன் நீரைக் கிழித்துச் செல்லும் மீன்களுக்கு வீட்டிலேயே உயிர் கொடுப்போமா?
தேவையான பொருள்கள்:
பெரிய செவ்வகப் பெட்டி 1, தடித்த பிளாஸ்டிக் காகிதம், செல்லோஃபோன் காகிதம், செல்லோடேப், பென்சில், கத்தரிக்கோல், மார்க்கர் பேனா.
செய்முறை:
1. செவ்வக அட்டைப் பெட்டியை ஒரு அங்குல உயரத்துக்கு வெட்டிக்கொண்டு அதற்கு வண்ணமடித்துக்கொள்ளுங்கள்.
2. பிளாஸ்டிக் காகிதத்தில் வெவ்வேறு வடிவங்களில் மீன் உருவங்களை வரைந்து, அவற்றை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை அட்டைப் பெட்டியின் உள்ளே வைத்துவிடுங்கள்.
3. இப்போது பெட்டியின் மேல் பகுதியை செல்லோஃபோன் காகிதத்தால் விறைப்பாக மூடி, சுற்றிலும் செல்லோடேப்பால் ஒட்டிவிடுங்கள்.
4. இப்போது உங்கள் கையால் பெட்டியின் மேல் பகுதியை அழுத்தமாக உரசுங்கள். பெட்டியின் உள்ளே மீன்கள் துள்ளியபடி நீந்துவது போல் தோன்றுகிறதா என்று பாருங்கள்.
© Amrita Bharati 2015