மாயா பஜார்

குழந்தைப் பாடல்: கைபேசி

தவமணி கோவிந்தராஜன்

கைபேசியம்மா கைபேசி

கதைகள் பேசலாம் கைபேசி

இரவும் பகலும் அதில் பேசி

பொழுதைப் போக்கலாம் கைபேசி.

சிட்டுக்குருவி போலவே

சின்னதான கைபேசி

சின்னப்பறவை போலவே

சிணுங்கும் நல்ல கைபேசி.

கலைகள் வளர்க்கும் கைபேசி

கைக்குள் அடங்கும் கைபேசி

வலையை வீசும் கைபேசி

வம்பிழுக்கும் கைபேசி.

அவசரத்துக்கு உதவும் கைபேசி

அவசியத்துக்கு உதவும் கைபேசி

ஆசைக்கு உதவும் கைபேசி

அவதிக்குள்ளாக்கும் கைபேசி.

கைபேசியில்லா வாழ்க்கையை

கனவிலும் நினைக்க முடியலையே

கருத்தாக நாமும் பேசிடுவோம்

கவலை என்றும் இல்லையே.

SCROLL FOR NEXT