போரில் மரணமடைந்த தலைவர்களின் சிலைகளில் உள்ள குதிரைகள் கால்களைத் தூக்கியவாறே இருக்கும்.
உலகிலேயே அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்தான் அதிகப்படியான மக்கள் வேலைக்கு நடந்து செல்கிறார்கள்.
மனிதனின் மரபணுக்கள் சிம்பன்சியின் மரபணுக்களுடன் 98.45 சதவீதம் ஒத்துப்போகின்றன.
ஒரு இல்லத்தரசி ஒரு நாளில் வீட்டுக்குள்ளேயே சராசரியாகப் பத்து மைல்களுக்கு மேல் நடக்கிறார்.
உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வது போலச் சவுதி அரேபியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒட்டகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆப்பிள் அல்லது வாழைப்பழத்தின் இடையே ஆரஞ்சுப் பழத்தை வைத்தால் அது சீக்கிரமே பழுத்துவிடும். பழங்களிலிருந்து வெளி வரும் வாயுவே இதற்குக் காரணம்.
பத்தில் எட்டு பேர் தூக்கத்தில் தங்களை அறியாமலேயே குறட்டை விடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடித்து இறப்பவர்களைவிட தேனீக்களால் கொட்டப்பட்டு இறப்பவர்களே அதிகம்.
இங்கிலாந்து நாட்டு சட்டப்படி வீட்டில் வளர்க்கும் பன்றிக்கு விளையாட்டுப் பொருட்கள் கட்டாயமாக வாங்கித் தர வேண்டும்.