மாயா பஜார்

குழந்தைப் பாடல்: ஆலமர ஆந்தை

கீர்த்தி

ஆல மரப் பொந்திலே

ஆந்தை ஒன்று இருந்தது!

அது அலறும் சத்தம்கேட்டு

எனக்கு அச்சம் வந்தது!

தீய பறவை அதுவென

நான் கேட்டு அறிந்தது

எல்லாம் அவ்வேளையில்

என் நினைவில் வந்தது!

நான் மிரண்டு நிற்பதைக்

கண்டு எந்தன் அருகிலே

அப்பா வந்து சொன்னதும்

உண்மை எனக்குப் புரிந்தது!

மனிதர் பேசும் மொழிபோல

பறவை விலங்கு பேசுதாம்!

ஆந்தை குரலும் அதுபோல

அச்சம் தேவை இல்லையாம்!

இரவில் வந்து ஆந்தையும்

எலிகள் பிடித்து உண்ணுதாம்!

அதனால் எலித் தொல்லையும்

ஊரில் ரொம்ப இல்லையாம்!

உருவம் குரல் பார்த்துநாம்

உலகில் வாழும் உயிர்களை

ஒதுக்கி வைக்கக் கூடாதாம்!

அதுவே நமக்கு நல்லதாம்!!

SCROLL FOR NEXT