உங்கள் வீட்டில் அலங்காரப் பொருட்கள் இருக்கின்றவா? இல்லையென்றால், பாட்டிலில் அழகான அலங்காரப் பூச்சட்டி செய்து பார்க்கத் தயாரா?
என்னென்ன வேண்டும்?
பிளாஸ்டிக் பாட்டில் , கத்தரிக்கோல், உங்களுக்குப் பிடித்த பூக்கள்.
எப்படிச் செய்வது?
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அதன் மேல் பாகத்தை வெட்டி எடுத்துவிடுங்கள்.
பாட்டிலின் மேலிருந்து கீழே, மூன்று அங்குல நீளத்துக்குச் சமமான இடைவெளி விட்டுக் கீற்றுகளைப் போல வெட்டிக்கொள்ளுங்கள்.
படத்தில் காட்டியபடி கவனமாக அனைத்துக் கீற்றுகளையும் வெளிப்புறமாக அழுத்திச் சமமாக்கிக்கொள்ளுங்கள்.
முதல் கீற்றை எடுத்து அதற்கு அடுத்து வரும் கீற்றின் பின்புறமாக மடக்கிப் பின்னுங்கள்.
இப்படியே எல்லாக் கீற்றுகளையும் மடக்கிவிடுங்கள்.
இப்போது ஒரு அழகான பூச்சட்டி தயாராக உள்ளது. அதில் தண்ணீர் ஊற்றி உங்களுக்குப் பிடித்த மலர்களையும், சிறிய வண்ணக் கற்களையும் வைத்து அழகுபடுத்தி, வரவேற்பறையில் வைக்கலாம்.