வீட்டின் வாசலில் அழகுக்காகத் தொங்கவிடப்படும் தோரணங்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு தோரணத்தைச் செய்வோமா குழந்தைகளே!
தேவையான பொருள்கள்:
நடுத்தர அளவிலான காகிதத் தட்டுகள் 5, ஒட்டும் தன்மை கொண்ட தகடு போன்ற வெள்ளியிலான காகிதங்கள் சில, வட்ட வடிவமான சிறிய கண்ணாடித் துண்டுகள், பசை, நூல், பென்சில்.
செய்முறை:
1. காகிதத் தட்டுகளை வெள்ளியிலான காகிதங்கள் மீது வைத்து அதைச் சுற்றி வட்டமிட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இந்த வட்டத்தை ஒட்டி, படத்தில் காட்டியுள்ளபடி சிறு சிறு வட்டங்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
2. பின்னர் இவற்றை வெட்டி எடுத்துக்கொண்டு, காகிதத் தட்டின் இரு புறங்களிலும் ஒட்டிக்கொள்ளுங்கள்.
3. கண்ணாடித் துண்டுகளில் பசை தடவி அவற்றைக் காகிதத் தட்டின் இரு புறங்களிலும் படத்தில் காட்டியுள்ளபடி அலங்காரமாக ஒட்டிக்கொள்ளுங்கள்.
4. இப்போது அனைத்துக் காகிதத் தட்டுகளின் மேல் முனையிலும் சிறிய துளையிட்டு நூல் மூலம் அனைத்தையும் ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த வெள்ளித் தோரணத்தைப் பிற தோரணங்களுடன் இணைத்து அலங்காரமாகத் தொங்கவிட்டு அழகு பார்க்கலாமே.