மாயா பஜார்

குழந்தைப் பாடல்: ஐஸ் தாத்தா

மொ.பாண்டியராஜன்

கோடை கால வெயிலிலே

கொளுத்தும் தார் சாலையிலே

பெட்டி தட்டி சத்தம் போட்டு

டப் டப் டப் டப்

ஐஸ் தாத்தா வந்துட்டேன்

ஐஸ் கொண்டு வந்துட்டேன்

அஞ்சு ரூபா கொடுத்தாக்கா

ஐஸ் ஒண்ணு தந்துட்டேன்

பால் ஐஸ் வேணுமா

பாதாம் ஐஸ் வேணுமா

பஞ்சு மிட்டாய் கலரிலே

சேமியா ஐஸ் வேணுமா

ஓடோடி வாருங்கள்

ஒண்ணு ஒண்ணா வாங்குங்கள்

ஜில்லு ஐஸ் நான் தாரேன்

கிட்டே ஓடி வாருங்கள்!

SCROLL FOR NEXT