கணிதப் புதிர்
சிறுவன் ஒருவன் பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தான். அவன் 100 சந்தாதாரர்களைச் சேர்த்தால் அவனுக்கு போனஸ் உண்டு என உயரதிகாரி சொன்னார். அவனும் சந்தாதாரர்களைச் சேர்க்கத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட 3 சந்தாதாரர்களை அதிகமாகச் சேர்த்தான். எட்டாவது நாளன்று அவன் 100 சந்தாதாரர்களைச் சேர்த்துமுடித்து விட்டான். அப்படியானால் தினந்தோறும் அவன் எத்தனை சந்தாதாரர்களைச் சேர்த்திருப்பான் எனக் கணக்கிட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம்.
படப் புதிர்
வீட்டின் செல்லக்குட்டி கையில் கிடைத்த ஆப்பிளைக் கடித்து எடுத்துவிட்டாள். கொடுக்கப்பட்டுள்ள A,B,C,D,E எனும் ஐந்து துண்டுகளில் ஆப்பிளின் கடிக்கப்பட்ட பாகம் எது என்பதைக் கண்டறியுங்கள் பார்ப்போம்…
பொருத்துங்கள்
எந்த பலூனை யார் வைத்திருக்கிறார்?