மாயா பஜார்

நீங்களே செய்யலாம்: தானிய சூரியகாந்தி

செய்திப்பிரிவு

குழந்தைகளே சூரியகாந்திப் பூவைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பூவை வீட்டிலேயே தானியங்களை வைத்து செய்து பார்ப்போமா?

தேவையான பொருள்கள்:

சிறிது பாசிப் பருப்பு, சிறிது பச்சைப் பயறு, தேயிலைத் தூள், சிறிது வெந்தய விதை, தடிமனான காகிதம், பென்சில், பசை.

செய்முறை:

1. தடிமனான காகிதத்தில் இருந்து தேவையான அளவுக்கு ஒரு பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். படத்தில் காட்டியபடி சூரியகாந்திப் பூவின் அவுட் லைனை வரைந்துகொள்ளுங்கள்.

2. பூவின் மையப்பகுதியில் பசை உதவியுடன் தேயிலைத் தூளை ஒட்டிக்கொள்ளுங்கள்.

பூவின் ஒவ்வொரு இதழிலும் பசையைத் தடவி, அதன் மேலே பாசிப் பருப்பை ஒட்டிக்கொள்ளுங்கள்.

3. படத்தில் காட்டியுள்ளது போல் தண்டுப் பகுதியில் வெந்தய விதையை ஒட்டிக்கொள்ளுங்கள்.

4. இலைகளில் பாசிப் பயற்றை ஒட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு தானியங்களால் ஆன சூரியகாந்திப் பூ கிடைத்துவிட்டதா?

SCROLL FOR NEXT