மாயா பஜார்

புதிர் பக்கம் 28/04/2015

செய்திப்பிரிவு

கண்டுபிடி

எலக்ட்ராணிக் சாதனங்களை விற்கும் ஒரு கடையில் ஐந்து விதமான சாதனங்கள் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உதவியுடன் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு விடை அளியுங்கள் பார்க்கலாம்.

பென் டிரைவ் வைக்கப்பட்டுள்ள வரிசைக்கு மேலே செல்போன்கள் வைக்கப்பட்டிருந்தன. மைக்ரோவேவ் சாதனம் வைக்கப்பட்டிருந்த வரிசை செல்போன் வரிசைக்கும் பென் டிரைவ் வரிசைக்கும் மேலே இருந்தன. மேலும் பென் டிரைவ் இருந்த வரிசையில்தான் ஹெட்போன்களும் வைக்கப்பட்டிருந்தன. மின்சார கெண்டிகள் அடித்தட்டில் வைக்கப்பட்டிருந்தன.

அப்படியானால், உச்சி தட்டில் எந்த மின்னணுச் சாதனம் வைக்கப்பட்டிருந்தது?

© Amrita Bharati, 2015

என்ன விலங்கு கண்டுபிடி

படத்தில் காணப்படும் ஆறு விலங்குகளில் ஒன்று மட்டும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது அல்ல. அது எந்த விலங்கு எனச் சொல்லுங்கள் பார்ப்போம்?

எண் புதிர்

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டத்தைச் சுற்றியுள்ள எட்டுக் கோடுகளில் ஏழு கோடுகளில் எண்கள் உள்ளன. ஒரு எண் மட்டும் விடுபட்டுள்ளது. எந்த அடிப்படையில் எண்கள் தரப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து, அதன் மூலம் விடுபட்ட எண்ணைச் சரியாகச் சொல்லுங்கள் பார்ப்போம்.

படப் புதிர்

இந்தப் படம் 16 சிறு சிறு சதுரங்களால் ஆனது. அதன் நான்கு அவுட்லைன்கள் தரப்பட்டுள்ளன. படத்தை நன்கு பார்த்து எந்தெந்த இடத்தில் அந்த நான்கு அவுட்லைன்கள் பொருந்தும் எனக் கண்டுபிடியுங்கள்?

தலையைப் பொருத்துங்கள்

ஓட்டகச்சிவிங்கியின் தலையையும் உடலையும் பொருத்துங்கள் பார்ப்போம்

SCROLL FOR NEXT