மாயா பஜார்

புதிர் பக்கம் - 12/3/2015

செய்திப்பிரிவு

தவறுகள் என்ன?

மேலே உள்ள படத்தில் வழக்கத்துக்கு மாறாக சில விஷயங்கள் உள்ளன. அவற்றைக் கண்டிபிடியுங்களேன்.

- ராஜே

படப் புதிர்

மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு படங்களும் ஒரே மாதிரி இருக்கிறதா? ஆனால், ஒரு படம் மட்டும் பிற படங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது. அது எந்தப் படம் என்பதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?

ஜாலி புதிர்

நான் இரண்டு கால்களுடன் வெளியே சென்றேன். ஆனால், வரும் போது ஆறு கால்களுடன் வந்தேன். அது எப்படி? சொல்லுங்கள் பார்ப்போம்.

© 2015, Amrita Bharati

விடுகதை

1. ஒரே ஒரு குகை; 32 வீரர்கள்; ஒரு நாகம். அந்தக் குகை எது?

2. கடைசி வரை கசக்கிப் பிழிந்தாலும் இனிக்கும். அது என்ன?

3. காற்றைக் குடித்து காற்றிலேயே பறப்பான். அது என்ன?

4. மீன் பிடிக்கத் தெரியாதாம். ஆனால், வலை பின்னுமாம். அது என்ன?

5. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன ?

6. ஏரியில் இல்லாத நீர்; தாகத்திற்கு உதவாத நீர்; ஆனால் அது தண்ணீர் இல்லை. அது என்ன?

7. பிறக்கும்போது வால் உண்டு. இறக்கும்போது வாலைக் காணோம். அது என்ன?

8. தனியாக இதைச் சாப்பிட முடியாது. இது இருந்தால்தான் உணவு ருசிக்கும். அது என்ன?

9. தொட்டுப் பார்க்கலாம்; எட்டிப் பார்க்கமுடியாது. அது என்ன?

10. ஒருத்தருக்கு உணவளித்தால் ஊரையே கூட்டிவிடும். அது என்ன?

- எஸ். விஜய் சாம்சன்,

வித்தியாசம் கண்டுபிடி

இந்த இரு படங்களுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கிறீர்களா?

SCROLL FOR NEXT