மாயா பஜார்

புதிர் பக்கம் - 01/04/15

செய்திப்பிரிவு

ஞாபகப் புதிர்

படத்தில் உள்ள படங்களை ஒரு நிமிடம் கவனமாகப் பாருங்கள். இப்போது அந்தப் பக்கத்தை மூடி வைத்துவிட்டு, படத்தில் பார்த்த பொருட்களைப் பட்டியலிடுங்கள் பார்ப்போம். எண்ணிக்கைக்கு ஏற்ப உங்கள் ஞாபகச் சக்தியை அறிந்து கொள்ளலாம்.

ஞாபகத் திறன் மதிப்பெண்:

13 - 15 மிக நன்று

10 - 12 நன்று

07 - 09 சராசரி.

© 2015 Amrita Bharati

விடுகதை

1. வெள்ளை ராஜாவுக்குக் கறுப்பு உடை. அது என்ன?

2. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆள் இல்லை. அது என்ன?

3. கழற்றிய சட்டையை அதுவும் போடாது. வேற யாரும் போடவும் முடியாது. அது என்ன?

4. யாரும் செய்யாத கதவு. தானாகத் திறக்கும்; தானாக மூடும். அது என்ன?

5. உயரமான இடத்தில் இருந்தாலும் தாகம் தீர்ப்பதில் தனியிடம். அது என்ன?

6. பற்கள் இருந்தாலும் கடிக்கத் தெரியாது. அது என்ன?

7. வெள்ளை வீடு; மஞ்சள் புதையல். அது என்ன?

8. படுத்துத் தூங்கினால் வந்து ஆடும்; விழித்தால் ஓடிவிடும். அது என்ன?

9. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?

10. மரத்தின் மீது தொங்குது. ஆனால், மலை பாம்பு இல்லை. அது என்ன?

- வி. ஜீவிகா, 5-ம் வகுப்பு, வித்ய விகாஷ் பள்ளி, காரமடை, கோவை மாவட்டம்.

விரைவுப் புதிர்

இந்தக் கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களைப் பாருங்கள். கடைசியாக விடுபட்ட கட்டத்தில் என்ன வடிவம் வர வேண்டும் என்பதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புப் படத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT