வித்தியாசம் கண்டுபிடி
இரு படங்களுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடியுங்களேன்.
- வாசன்
சுடோகு
மூளைக்கு வேலைத் தருவது என்றால் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? மூளைக்கு வேலைக் கொடுத்து அருகில் உள்ள கட்டங்களில் விடுபட்ட எண்களை நிரப்புங்கள் பார்க்கலாம்.
- வாசன்
தவறுகள் என்ன?
இந்தப் படத்தில் தவறான விஷயங்கள் சில இடம் பெற்றுள்ளன. அவற்றைக் கண்டுபிடிக்கிறீர்களா?
- ராஜே
மனக் கணக்கு
ஒரு தச்சர், பக்கவாட்டில் 100 செ.மீ. உள்ள சதுர விளம்பரப் பலகையில் ஆணிகளை அடிக்க வேண்டியதிருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் மொத்தம் 27 ஆணிகள் வரவேண்டும். அவை அனைத்தும் சீரான இடைவெளில் அடிக்கப்பட வேண்டும். அப்படியென்றால் மொத்தம் எத்தனை ஆணிகள் தேவை எனக் கணக்கிட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம்?
© 2015, Amrita Bharati
விலங்கு புதிர்
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த விநோதமான விலங்கின் உள்ளே மொத்தம் ஆறு விலங்குகள் ஒளிந்துள்ளன. என்னென்ன விலங்குகள் என்பதைக் கண்டறியுங்கள் பார்ப்போம்.