பானை நல்ல பானை
பாங்கான பானை
மண்ணில் செய்த பானை
மனம் கவர்ந்த பானை
மண்ணில் செய்த பானையில்
நுண்ணிய துளைகள் இருக்குதே
தண்ணீரின் சூடும் வெளியேறி
வித்தை செய்வதை அறிவாயோ?
ஊற்றி வைத்த தண்ணீரை
மாற்றி விடும் குளிர்நீராய்
உடலுக்குக் கெடுதி இல்லாத
உன்னத நீரைத் தந்திடுமே.
காய் கனிகள் எதுவாயினும்
குளிர்ப்பெட்டி வேண்டாமே
போட்டு வைத்திடு பானையில்
போகாது கெட்டு எந்நாளுமே!
மின்சாரமும் தேவையில்லை
மின்னணுவும் அவசியமில்லை
ஏழைகளின் நண்பனாம்
சந்தேகம் என்றும் வேண்டாமே!