கண்டுபிடி
இங்கு உள்ள கேக்குகளில் ஒரே மாதிரி உள்ள இரண்டு கேக்குகளைக் கண்டுபிடியுங்களேன்.
- வாசன்
படப் புதிர்
கொடுக்கப்பட்டுள்ள நான்கு படங்களையும் சிறுவன் ஒருவன் மாற்றி மாற்றி வைத்துவிட்டான். படத்தைப் பார்த்து அவற்றை ஒழுங்கான வரிசையில் அடுக்குங்கள் பார்ப்போம்.
எண் புதிர்
1999 என்ற எண்களின் வரிசையை மாற்றாமால் அவற்றைக் கூட்டியோ கழித்தோ பெருக்கியோ வகுத்தோ 89 என்ற எண்ணை உங்களால் கொண்டு வரமுடியுமா?
© Amrita Bharati, 2015
விடுகதை
1. வேளைக்கு வேளை புது ரோஜா. வேண்டுகின்ற மகாராஜா. அது யார்?
2. தலையில்லாதவன்; தலையைச் சுமப்பான். அது யார்?
3. நடக்காத கால்கள் உண்டு. மடக்காத கைகள் உண்டு. வளையாத முதுகு உண்டு. அது என்ன?
4. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் சாப்பிடலாம். அது என்ன?
5. தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும். அது என்ன?
6. கடமை வீரன். காக்கிச் சட்டை அணிய மாட்டான். அது யார்?
7. மலையில் பிறக்கும். ஆனால், அருவி அல்ல. சுவையைக் கொடுக்கும். ஆனால் பானம் இல்லை. அது என்ன?
8. விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை. அது என்ன?
9. முத்தமிழைக் கேட்கும் மூடாத கதவுகள். அது என்ன?
10. விருந்துக்குத் திறந்திருக்கும். விருந்தினரைச் சாகடிக்கும். அது என்ன?
11. கடும் வெயிலில் கருந்தாமரை மலரும். அது என்ன?
- ஆர். பத்மப்ரியா, சேலம்.