மாயா பஜார்

குழந்தைப் பாடல்: கோடை வெயிலை வெல்லுவோம்

உமையவன்

இரண்டு வேளை நாமுமே

குளிக்க வேண்டும் நாளுமே

எண்ணெய் தேய்த்துக் குளிக்கவே

விருப்பம் கொள்ள வேண்டுமே

காய்களோடு பழங்களும்

விரும்பி உண்ண வேண்டுமே

தண்ணீரோடு இள நீருமே

அதிகம் குடிக்க வேண்டுமே

தயிரும் மோரும் நாமுமே

உணவில் சேர்க்க வேண்டுமே

உண்ட உணவு செரித்தபின்

மீண்டும் உண்ண வேண்டுமே

சித்திரை வெயிலில் செல்வதை

நாமும் தவிர்க்க வேண்டுமே

சின்னச்சின்ன பறவைக்கும்

தண்ணீர் வைக்க வேண்டுமே

SCROLL FOR NEXT