ஐஸ்கிரீம் சாப்பிட்ட ஸ்பூனை என்ன செய்வீர்கள்? தூக்கி எறிவீர்களா? இனி அப்படிச் செய்யாதீர்கள். அதை வைத்து அழகான பொம்மை செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
1. ஐஸ்கிரீம் ஸ்பூன் (மரத்தாலானது) 2. சாக்லேட் பேப்பர் 3. கறுப்பு, சிவப்பு ஸ்கெட்ச் பேனா 4. பசை
செய்முறை:
1. ஸ்பூனின் வாய்ப் பகுதியில் கறுப்பு ஸ்கெட்ச் பேனா உதவியுடன் கூந்தல், கண், புருவம், காது போன்ற பாகங்களை வரைந்துகொள்ளுங்கள். சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் வாயை வரைந்துகொள்ளுங்கள்.
2. இரண்டு சாக்லேட் பேப்பர்களை எடுத்து அவற்றைப் படத்தில் காட்டியதுபோல் அழகாக மடிப்பு மடிப்பாக மடியுங்கள்.
3. ஒரு சாக்லேட் பேப்பரைப் படத்தில் காட்டியுள்ளது போல் கழுத்துப் பகுதியாக ஸ்பூனில் ஒட்டுங்கள்.
4. மற்றொரு சாக்லேட் பேப்பரை ஸ்கர்ட் போல் நீள வாக்கில் ஸ்பூனில் முந்தைய சாக்லேட் பேப்பருக்குக் கீழே ஒட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது அழகாக ஆடும் பொம்மை ஒன்று உங்களுக்குக் கிடைத்துவிட்டதா?