மாயா பஜார்

நீங்களே செய்யலாம்: அழகான வானவில் தட்டு

செய்திப்பிரிவு

டைனிங் டேபிள் மேல் சூடான டீ கப்பையோ, காபி கப்பையோ நேரடியாக வைக்காமல் சிறிய தட்டு ஒன்றை வைத்து அதன் மேல் கப்பை வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது ஒரு சிறிய தட்டு. சூட்டைக் கடத்தாமல் இருக்க அதை அடியில் வைப்போம். அதைப் போன்ற வானவில் தட்டை போல் வண்ணமயமாகச் செய்வோமா?

தேவையான பொருட்கள்:

தட்டையான மர ஐஸ்கிரீம் குச்சிகள், பெயிண்ட், நீர் புகாத பசை,

செய்முறை:

1. மூன்று ஐஸ்கிரீம் குச்சிகளை எடுத்து அதன் மீது நீர் புகாத பசையை நன்றாகத் தடவுங்கள்.

2. இப்போது நான்கு குச்சிகளைப் படத்தில் காட்டியுள்ளது போல் அந்த மூன்று குச்சிகள் மீது ஒட்டுங்கள்.

3. அவை நன்கு உலரும்வரை பொறுத்திருங்கள்.

4. இப்படி மொத்தம் ஏழு தட்டுகளைச் செய்யுங்கள். அவற்றுக்கு வயலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வானவில்லின் ஏழு நிறங்களைப் பூசுங்கள். இவற்றை மேசை மீது வைக்கும்போது பார்க்க அழகாக இருக்கும்.

SCROLL FOR NEXT