மாயா பஜார்

களிப்பூட்டும் குளம்: குழந்தைப் பாடல்

மருதம் செல்வா

குளத்து நீரில் குளித்திடவே

அழுது புரண்டு வழக்காடி

அப்பா கூட வந்திடுவேன்

காலை நேரம் கால்நடையாய்

மீன்கள் கூட்டம் நடுவினிலே

நானும் நீந்திக் களித்திடவே

நீரில் நிகழும் சலனத்தால்

சிதறிக் கலையும் சிறுமீன்கள்

துள்ளிக் குதித்து விளையாடி

மூழ்கிக் குளிக்கும் சுகத்தினிலே

பள்ளி செல்லும் நேரத்தை

மறந்து போவேன் பல நாளும்

அப்பா கத்தும் சத்தத்தைக்

கேட்டும் அசையா எனை நோக்கி

நெளிந்து நெருங்கும் நீர்ப்பாம்பு

விரட்டும் என்னைக் கரை நோக்கி

SCROLL FOR NEXT