மாயா பஜார்

நீங்களே செய்யலாம் - முட்டை ஓட்டில் அலங்காரம்

செய்திப்பிரிவு

வசீகரமான பூக்களை ஃபிளவர் வேஸில் அடுக்கி மேசை மீது வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு ஃப்ளவர் வேஸை நமது வீட்டிலேயே செய்யலாமா?

தேவையான பொருள்கள்:

காலி பாட்டில், முட்டை ஓடுகள், பசை, பெயிண்ட்.

செய்முறை:

1. முட்டை ஓடுகளை நன்கு சோப்புப் போட்டு தண்ணீரில் கழுவிக்கொள்ளுங்கள். அது சுத்தமாகும்வரை கழுவ வேண்டும்.

2. பின்னர் முட்டை ஓடுகளைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளுங்கள்.

3. இந்த முட்டை ஓட்டுத் துண்டுகளை பாட்டிலின் மேற்பகுதியில் ஒவ்வொன்றாக ஒட்டுங்கள்.

4. பெயிண்ட் மூலம் முட்டை ஓட்டுத் துண்டுகள் மீது வண்ணம் பூசுங்கள்.

பார்ப்பதற்கு அழகான ஃப்ளவர் வேஸ் ஒன்று உங்களுக்குக் கிடைத்துவிட்டதா? பல்வேறு நிறங்கள் கொண்ட அழகான பூங்கொத்துகளை வைத்து இதை உங்கள் வீட்டு ஷோ கேஸில் அல்லது மேசையில் வைத்து அழகு பார்க்கலாமே.

SCROLL FOR NEXT