இசை நிகழ்ச்சிகளில் தோளில் மாட்டிக் கொண்டு கலைஞர்கள் கிதார் வாசிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அதுபோன்ற கிதார் ஒன்றை வீட்டிலேயே செய்து பார்க்கலாமா?
தேவையான பொருள்கள்:
15X10X8 அளவுள்ள பழைய காட்போர்டு பெட்டி அல்லது ஷூ வைக்கும் அட்டைப் பெட்டி ஒன்று, ரப்பர் பேண்டுகள், செல்லோ டேப், பென்சில், கத்தரிக்கோல், மர ஸ்கேல், பெயிண்ட்
செய்முறை:
1செல்லோ டேப்பைப் பயன்படுத்தி பெட்டியின் ஓரங்களை நன்கு மூடிவிடுங்கள்.
2 பெட்டியின் மேற்புறத்தில் கத்தரி கொண்டு நீள் சதுர வடிவில் ஒரு துளையைப் போடுங்கள்.
3 அந்தத் துளையின் மேலே செல்லும்படி மூன்று ரப்பர் பேண்டுகளைப் பெட்டியின் மீது சுற்றிக்கொள்ளுங்கள்.
4 படத்தில் காட்டியுள்ளபடி ஒரு பக்கத்தில் பென்சில் ஒன்றை ரப்பர் பேண்டின் அடியில் செருகிக்கொள்ளுங்கள்.
5 இந்தப் பெட்டியின் அடிப்பகுதியில் மர ஸ்கேலை ஒட்டிக்கொள்ளுங்கள். இதுதான் கிடாரின் கழுத்துப் பகுதி.
இப்போது பெயிண்டின் உதவியால் இந்தப் பெட்டியை அலங்கரியுங்கள். இப்போது உங்களிடம் அழகான கிதார் ஒன்று கிடைத்து விட்டதல்லவா?