நீங்கள் சின்ன குழந்தையாக இருந்தபோது உங்களுடன் நாய்க்குட்டி, யானை, புலி, பூனை போன்ற பொம்மைகளில் ஏதாவது ஒன்று உங்களுடன் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருந்திருக்கும். பொம்மை பிடிக்காத குழந்தைகள், இந்த உலகில் நிச்சயமாக இருக்க மாட்டாங்கன்னு சொல்லலாம்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ரமி. அவளோட அப்பாவும் அம்மாவும் பொம்மைக் குதிரை செஞ்சு, ரோட்டுல பரப்பி விக்கிறாங்க. ஆனா, அவங்க ரமிக்கு எந்தப் பொம்மையையும் கொடுக்கல. ஏன்னா, அதை அவ அழுக்காக்கிட்டா, பொம்மைய விக்க முடியாதே.
அதனால, விளையாடு வதற்காக அவள் தானே ஒரு குதிரை பொம்மையைச் செஞ்சுக்கிட்டா. அது அவளோட அப்பா, அம்மா செஞ்சது போலத் திருத்தமாக இல்லைன்னாலும், இப்போது ரமி விளையாட ஒரு பொம்மை கிடைச்சிருச்சு.அதற்குப் பிறகு அந்தப் பொம்மைதான் அவளோட உலகம்.
ஆனா ஒரு நாள், வசதி படைத்த அம்மாவுடன் வந்த ஒரு சிறுமி, ரமி செய்த பொம்மையைப் பார்த்துட்டு, அதுதான் எனக்கு வேணும்னு கேட்கிறா. ரொம்ப நாள் விளையாடப் பொம்மையே இல்லாமல் இருந்த ரமிகிட்ட, இப்போ இருக்கிற அந்த ஒரே பொம்மையும் போய்டுமா?
இதுக்கான பதிலை சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் (சி.பி.டி.) வெளியிட்டுள்ள பொம்மைக் குதிரை புத்தகத்துல படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்.
பொம்மைக் குதிரை, தீபா அகர்வால், தமிழில்: ஆர். ஷமீமுன்னிசா, சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட், 781, ரயாலா டவர்ஸ், 18 பி, எல்.ஐ.சி. எதிரே, அண்ணா சாலை, சென்னை - 2. தொடர்புக்கு: 044-30221850,