ஸ்கேட்டிங் விளையாட்டு பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா? காலில் சக்கர வச்ச ஷூ போட்டுட்டு சர்னு போறது. உங்களில் சிலரோட ஸ்கூல இந்த விளையாட்டு சொல்லிக்கொடுத்திருப்பாங்க. இந்த விளையாட்டச் சொல்லிக்கொடுக்க தனியாக கோச்சிங் சென்டரும் இருக்கு. இந்த விளையாட்டைக் கத்துக்கிட்ட நீங்க சர்சர்னு எங்கயும் வேகமாகப் போய்வரலாம்.
ஆனா இந்த விளையாட்டை ரோட்ல விளையாடக் கூடாது. ஏன்னா ரோட்ல போற கார்ல, பைக்ல மோதிட வாய்ப்பு இருக்கு. ஸ்கேட்டிங் விளையாடுறதுக்குன்னு இருக்கிற க்ரவுண்ட்லதான் விளையாடணும்.
இந்த விளையாட்டுல உங்கள மாதிரி குட்டிப் பையன் சாதனை படைச்சிருக்கான். அவன் பெயர் மெட்வின் தேவா. இவன் சென்னைல அண்ணாநகர்ல ஒரு ஸ்கூல 3-ம் வகுப்பு படிக்கறான். இவன் 3 வயசுல இருந்தே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துட்டுவரான். மெட்வினோட அப்பா ராஜூவும் அம்மா ஜாஸ்மீன் ஜூலியும் அவனோட ஆர்வத்தைப் புரிஞ்சுட்டு அவனைத் தொடர்ந்து என்கரேஜ் பண்ணியிருக்காங்க. அவனும் ஆர்வமா ஸ்கேட்டிங் கத்திருக்கான்.
முதலில் 2011-ம் ஆண்டு சென்னை அளவில் நடந்த போட்டில கலந்திருக்கான். அந்தப் போட்டில தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறான். அடுத்த வருஷம் நடந்த போட்டியிலும் பதக்கம் வாங்கி குவிச்சிருக்கான்.
சரி, மெட்வின் செஞ்ச சாதனை என்ன தெரியுமா? ஸ்கேட்டி விளையாட்டு காலில் சக்கரம் உள்ள ஷூ அணிந்து போறதுன்னு சொன்னேன் இல்லையா. ஓட்டப் பந்தயம் மாதிரி இந்த ஷூ போட்டுட்டுப் போனா போதும். ஆனா மெட்வின் சாதனை படைச்சிருப்பது சாதாரண ஸ்கேட்டிங் விளையாட்டுல அல்ல. லிம்போ ஸ்கேடிங்கில் அவன் சாதனை படைச்சிருக்கான். லிம்போ ஸ்கேட்டிங்கிறது தாழ்வான உயரத்தில் படுத்த மாதிரி தூரத்தைக் கடக்கிறது (கீழே உள்ள படத்தில் மெட்வின் படுத்தபடி பயணிப்பதைப் பாருங்கள்). அப்படிப் படுத்தபடியே இவன் 50 மீட்டர் தூரத்தை 11 நிமிஷத்துல கடந்திருக்கிறான். கடந்த பிப்ரவரி மாசம் நம்ம நாட்டோட தலைநகர் டெல்லிலதான் இந்தப் போட்டி நடந்திருக்கு. இந்த வெற்றி மூலம் மெட்வினுக்கு ஆசிய கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் கிடைச்சிருக்கு.
மெட்வின் அவுங்க அப்பா அம்மாவுக்கு மட்டுமில்லாம அவன் படிக்கிற ஸ்கூலுக்கும், நம்ம நாட்டுக்கும் பெயர் வாங்கித் தந்திருக்கிறான்.
மெட்வின் கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய விஷயம் இருக்கு இல்லையா? நீங்களும் உங்களுக்குப் பிடிச்ச விளையாட்டுல, படிப்புல, படம் வரையுறதுல, பாட்டுப் பாடுறதுலயும் சாதனை படைக்கலாம்.