மாயா பஜார்

நீங்களே செய்யலாம் : தட்டில் செய்யலாம் மீன்

செய்திப்பிரிவு

வீட்டில் கண்ணாடித் தொட்டி வாங்கி வண்ண மீன்களை வைத்து ரசிப்பீர்கள் அல்லவா? தொட்டிக்குள் அழகாக நீந்தும் மீன்களைப் பார்க்க உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? அதைப் போன்ற மீனை வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? அப்படி ஒரு மீனைச் செய்வோமா?

தேவையான பொருள்கள்: காகிதத் தட்டு, தடித்த காகிதம் ஒரு ஷீட், வண்ணங்கள், பசை, கத்தரிக்கோல்.

செய்முறை:

காகிதத் தட்டை மீனின் உடம்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.

மீனின் தலை, துடுப்பு, கண், வால் போன்றவற்றைத் தடித்தக் காகிதத்திலிருந்து படத்தில் காட்டியவாறு வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்

பின்னர் இவற்றில் படத்தில் காட்டியுள்ளபடி வரைந்துகொண்டு மீனின் உடம்பான காகிதத் தட்டில் ஒட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது அழகான மீன் உங்களுக்குக் கிடைத்துவிட்டதா?

SCROLL FOR NEXT