மாயா பஜார்

நீங்களே செய்யலாம் -புத்தக அடையாள அட்டை

செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள்:

பயன்படுத்தப்பட்ட அஞ்சல் அட்டை, டிசைனர் கத்தரி, பென்சில், அலங்காரப்பொருள்.

செய்முறை:

1 செவ்வக வடிவ அஞ்சலட்டையில் ஒரு பக்கத்தை டிசைனர் கத்தரியால் கத்தரித்துக்கொள்ளுங்கள். இப்போது முக்கோண வடிவ புத்தக அடையாள அட்டையை உருவாக்கலாமா?

2 இந்த அட்டை மீது உங்களுக்குப் பிடித்த வேடிக்கை யான முகத்தை வரைந்து கொள்ளுங்கள். அந்த அலங்கார வடிவத்தை ஏதேனும் ஒரு பொருளை வைத்து அலங்கரித்துக்கொள்ளுங்கள். இப்போது அடையாள அட்டை தயாராகிவிட்டது.

3 புத்தகப் பக்கத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இந்த அடையாளத்தைப் புத்தகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கலாம் இல்லையா?

முழுப் புத்தகத்தை கொடுத்தால் ஒரேயடியாக அதை நீங்கள் படித்து விடுவீர்களா? இல்லை அல்லவா? இடையிடையே விட்டுவிட்டு படிப்போம்.

மீண்டும் படிக்கும்போது ஏற்கெனவே எதுவரை படித்திருக்கிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துகொள்ள அந்தப் பக்கத்தின் ஓரத்தில் மடித்து வைப்போம் இல்லையா? இனி அப்படி மடிக்கவே வேண்டாம். அதற்காகப் புத்தக அடையாளக் காகிதத்தைப் பயன்படுத்தலாம் தெரியுமா? அதை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம்.

© Amrita Bharati, 2015

SCROLL FOR NEXT