மாயா பஜார்

வாழ்க்கை அனுபவம்: சோதனைக்கு விருது

செய்திப்பிரிவு

காமராஜர் தமிழக முதல்வராக இருந்த நேரம். சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிவிட்டார். கைதியைப் பிடிக்கக் காவலர்கள் இரவு பகலாக அலைந்து கொண்டிருந்தனர். சாலையில் செல்லும் வாகனங்களில் கைதி மறைந்து இருக்கிறாரா என்று காவலர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் சென்றது. காவல் அதிகாரி காரைக் கை நீட்டி மறித்தார். கார் நின்றது. காரைச் சோதனையிட வேண்டும் என்று ஓட்டுநரிடம் கூறினார் அந்த அதிகாரி.

உள்ளே யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று அடுத்த கேள்வி கேட்டு முடிப்பதற்குள் காரில் இருந்தபடி, ‘யாருண்ணேன்...’ என்று ஓட்டுநரைப் பார்த்துக் கேட்டார். அப்போதுதான் காரில் இருப்பது முதல்வர் காமராஜர் என்ற விஷயம் காவல் அதிகாரிக்குத் தெரிந்தது. உடனே அந்த அதிகாரி பதறினார்.

‘‘ ஐயா.. மன்னித்துக்கொள்ளுங்கள்.. இது உங்கள் கார் என்று தெரியாமல் நிறுத்திவிட்டேன்’’ என்று அஞ்சியபடி விளக்க முற்பட்டார். காமராஜர் ஒன்றும் பேசவில்லை. காவல் அதிகாரியின் பெயர், பணிபுரியும் இடம் ஆகிய தகவல்களை உதவியாளர் மூலம் கேட்டுக் கொண்டார். அதிகாரிக்குப் பயம் இன்னும் அதிகமானது. வேலை என்ன ஆகுமோ என்று வெலவெலத்துப் போனார்.

ஆனால், அந்த ஆண்டு சிறந்த காவலர் விருதுக்கு அந்த அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். தன் கடமையைத் தவறாமல் செய்த அந்த அதிகாரிக்குப அன்று பதவி உயர்வு வழங்கி கவுரவித்தார் காமராஜர்.

உள்ளே யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று அடுத்த கேள்வி கேட்டு முடிப்பதற்குள் காரில் இருந்தபடி, ‘யாருண்ணேன்...’ என்று ஓட்டுநரைப் பார்த்துக் கேட்டார். அப்போதுதான் காரில் இருப்பது முதல்வர் காமராஜர் என்ற விஷயம் காவல் அதிகாரிக்குத் தெரிந்தது. உடனே அந்த அதிகாரி பதறினார்.

-அ.சையத் அமீனுதீன், கடலூர்

SCROLL FOR NEXT