மாயா பஜார்

புத்தாண்டே வருக! - குழந்தைப் பாடல்

செய்திப்பிரிவு

புத்தாண்டு வருகுது

புத்துணர்வு பெருகுது

வாணவெடி வெடிக்குது

வண்ணமாகச் ஜொலிக்குது !

வாழ்த்துக்களைச் சொல்லுவோம்

வாழ்க்கையிலே வெல்லுவோம்

மகிழ்ச்சிதனை அள்ளுவோம்

சுட்டிகளாய்த் துள்ளுவோம் !

நல்லதையே செய்திட

உறுதிமொழி எடுப்போம்!

தீயதைக் கைவிட

தீர்க்கமாய் இருப்போம் !

அனைவரையும் நினைத்திடுவோம்

உற்றார் உறவினராக

அன்பினால் நனைத்திடுவோம்

உற்ற தோழராக!

சுற்றுச்சூழல் நலமாக

மரக்கன்றுகளை நட்டிடுவோம் !

இயற்கையை அழிக்கின்ற

நெகிழிப்பையை விட்டிடுவோம் !

வீடு, நாடு இரண்டையும்

வளம்பெறச் செய்திடுவோம் !

வெற்றிகளைக் குவித்து

மகிழ்வாய் என்றும் இருந்திடுவோம்!

- ஆசிரியர் மு.மகேந்திர பாபு, இளமனூர் , மதுரை.

SCROLL FOR NEXT