மாயா பஜார்

குழந்தைப் பாடல் - நாட்காட்டி

செய்திப்பிரிவு

நாட்காட்டி

நாளைக் காட்டும் நாட்காட்டி

கிழமையும் சேர்த்தே அதுகாட்டும்

நாளும் நாமதைக் கிழித்தாலும்

வருத்தப் படாத நாட்காட்டி!

திட்டம் தீட்ட உதவிடுமே

தினமும் ஞாபகப் படுத்திடுமே

நடக்கும் நிகழ்வைக் குறித்திடவே

நாட்குறிப்பேடாகப் பயன்படுமே!

அனைத்து மதத்தின் பண்டிகையும்

ஆன்றோர் சான்றோர் பிறந்தநாளும்

நல்ல கெட்ட நேரத்தையும்

நாளும் சொல்லும் நாட்காட்டி!

ஜனவரியில் பிறக்கும் நாட்காட்டி

டிசம்பரில் ஆயுள் முடிந்திடுமே

அழிவு என்றும் இதற்கில்லை

மீண்டும் புதிதாய்ப் பிறந்து வரும்!

-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

SCROLL FOR NEXT