தீ
ப்பெட்டியையும் தீக்குச்சிகளையும் பெரியவர்களின் முன்னிலையில் கவனமாகக் கையாளுங்கள்.
காலி தீப்பெட்டி, 2 தீக்குச்சிகள், ரப்பர்பேண்ட், சிறிய மரத்துண்டு, தண்ணீர் நிரப்பிய அகலமான பாத்திரம்.
1. படத்தில் காட்டியபடி தீப்பெட்டியின் இரு பக்கங்களிலும் தீக்குச்சிகளைச் செருகவும்.
2. இரண்டு குச்சிகளையும் இணைத்து, ரப்பேர்பேண்ட் போடவும்.
3. ரப்பர்பேண்ட்டுக்கு நடுவில் சிறிய மரத்துண்டை வைக்கவும். இதுதான் படகின் துடுப்பு.
4. மரத்துண்டை முறுக்கி விடவும்.
5. நீருக்குள் தீப்பெட்டியை வைத்து, கையை எடுத்துவிடுங்கள். மரத்துண்டு சுற்ற ஆரம்பிக்கும். படகும் நகரும்.