1. கலாமுக்கு நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் அஹமது ஜலாலுதீன்.
2. விடுமுறை நாட்களில் வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
3. ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் கலாமுக்கு, அய்யா துரை சாலமன் என்ற நண்பர் கிடைத்தார். இவர்தான், ‘எல்லாவற்றுக்கும் ஆசைப்படு. ஆசை நிறைவேறக் கனவு காண். கனவு நிறைவேற நம்பிக்கையோடு முயற்சி செய்’ என்று சொன்னவர்.
4. செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, இலக்கியம், தத்துவத்தின் மீது ஈடுபாடு இருந்தது. இறுதி ஆண்டில் இயற்பியலுக்கு ஆர்வம் திரும்பிவிட்டது.
5. அக்கா ஜோஹரா கொடுத்த நகைகளை விற்று, எம்.ஐ.டியில் சேர்ந்தார். க்ளைடர் என்ற இன்ஜின் இல்லாத விமானத்தைக் கலாமும் அவருடைய நண்பர்களும் பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் உருவாக்கினர்.
6. விமானப் பொறியாளர் பட்டம் பெற்ற கலாம், சில ஆண்டுகளில் பெங்களூருவில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட் நிறுவனத்தில் வேலை செய்தார். அங்கே நீரிலும் நிலத்திலும் சில அடிகள் உயரம் பறக்கும் ஹோவர் க்ராஃப்ட் இயந்திரத்தைத் தன் குழுவினரோடு உருவாக்கினார்.
7. தும்பா விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வகத்துக்குப் பயிற்சிக்காகச் சென்றார்.
8. இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாய், ரேடோ இயந்திரங்களைத் தயாரிக்கும் பொறுப்பை அளித்தார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரேடோ கலாம் குழுவினருக்குப் பெருமையைத் தேடித் தந்தது.
9. 1979-ம் ஆண்டு கலாம் குழுவினரின் முயற்சியால் பறக்கவிடப்பட்ட எஸ்.எல்.வி. விண்கலம் வெடித்துச் சிதறியது. ஆனால், அடுத்த ஆண்டே ரோஹிணி விண்கலம் வெற்றிகரமாகச் சுற்றி வந்தது.
10. 1981-ம் ஆண்டு அறிவியல் பணிகளுக்காக நாட்டின் உயர்ந்த விருது பத்ம பூஷண் வழங்கப்பட்டது.
11. 1982-ம் ஆண்டு பாதுகாப்பு ஆய்வுப் (DRDO) பணிக்குச் சென்றார் கலாம்.
12. நாக், ப்ருத்வி, ஆகாஷ், திரிஷுல், அக்னி என்று 5 திட்டங்கள் கலாம் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டன.
13. போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடை குறைந்த காலிப்பர்களைத் தன் உதவியாளர்களுடன் சேர்ந்து உருவாக்கினார்.
14. 1997-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
15. 1999-ம் ஆண்டு Wings fo fire என்ற பெயரில் சுயசரிதை வெளியிடப்பட்டது. பின்னர், ‘அக்னி சிறகுகள்’ என்று தமிழிலும் வெளிவந்தது.
16. 90% வாக்குகள் பெற்று, 2002-ம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
17. பூமி சுற்றும் வரை எல்லா நேரமும் நல்ல நேரம்தான் என்பார்.
18. கவிதை எழுதுவார், வீணையும் வாசிப்பார்.
19. குடியரசுத் தலைவர்களிலேயே மாணவர்கள், இளைஞர்கள், மக்களிடம் அதிகம் செல்வாக்குப் பெற்றவர் கலாமே!
20. 27 ஜூலை 2015 அன்று ஒரு கல்விக் கூடத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, 83 வயதில் நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.