மாயா பஜார்

நீங்களே செய்யலாம்: அழகிய கைப்பை!

வாசன்

சற்றுத் தடிமனான இரண்டு வெவ்வேறு வண்ணத் தாள்கள், சிறிய தாள் ஒன்று, கத்திரிக்கோல், பசை.

1. இரண்டு வண்ணத் தாள்களின் பின்புறம் முதல் படத்தில் காட்டியபடி கோடுகள் வரைந்து, வெட்டிக்கொள்ளுங்கள்.

2. படம் 2-ல் காட்டியபடி மேலிருந்து கீழாகத் தாளை மடித்துக்கொள்ளுங்கள்.

3. இரண்டு தாள்களையும் மூன்று சம பங்குகளாகப் பிரித்து வெட்டிக்கொள்ளுங்கள்.

4. ஒரு தாளில் a, b, c என்றும் இன்னொரு தாளில் 1, 2, 3 என்று பென்சிலில் எழுதிக்கொள்ளுங்கள்.

5. முதலில் எண் 3க்குள் cயை நுழைத்து, bயை 3க்குள் நுழைத்துவிடுங்கள்.

6. 2க்குள் aயை நுழைத்து, 1ஐ aக்குள் நுழைத்துவிடுங்கள். பிறகு bயை 1க்குள் நுழைத்து, இப்படி மாற்றி மாற்றி நுழைத்துவிடுங்கள்.

7. இன்னொரு தாளை எடுத்து இரண்டாக மடித்து, பசையைத் தடவுங்கள்.

8. பையின் நடுவில் இந்தத் தாளை ஒட்டிவிடுங்கள். இதோ அழகான கைப்பை தயார்.

SCROLL FOR NEXT