மாயா பஜார்

இது என்ன நாடு? - பாரசீகம் என்று அழைக்கப்பட்ட நாடு

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. இது ஓர் ஆசிய நாடு.

2. முன்பு பாரசீகம் என்று அழைக்கப்பட்டது.

3. மலைகள் அதிகமுள்ள நாடுகளில் இதுவும் ஒன்று.

4. மயில் சிம்மாசனத்தை இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்குக் கொண்டுசென்றார் நாதிர் ஷா.

5. கம்பளங்களுக்குப் புகழ்பெற்ற நாடு.

6. இதன் எல்லை நாடுகளில் ஒன்று பாகிஸ்தான்.

7. இந்த நாட்டைச் சேர்ந்த ஷிரின் இபாடி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்.

8் புகழ்பெற்ற கணிதவியலாளர் மரியம் மிர்ஸாகனி இந்த நாட்டில் பிறந்தவர்.

9. இதன் தலைநகர் டெஹரான்.

10. அழகான பாரசீகப் பூனையின் தாயகம்.

SCROLL FOR NEXT