1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?
2. அனலிலே பிறப்பான், ஆகாயத்திலே மறைவான். அது என்ன?
3. அந்தரத்தில் தொங்குது அரக்கனின் தலை. அது என்ன?
4. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
5. இலையைச் சுருட்டும் மரம்; ஏறினால் வழுக்கும் மரம். காயோ துவர்க்கும் மரம்; கனியோ இனிக்கும் மரம். அது என்ன?
-கீ.கு. பிரீத்திகா,
ஏழாம் வகுப்பு, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
காங்கேயம், திருப்பூர்.
1. வீரன் அழுவதும் சாம்பார் மணப்பதும் ஏன்?
2. ஒரு புட்டியில் இரண்டு தைலங்கள். அது என்ன?
3. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊஞ்சலாடுகிறது. அது என்ன?
4. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்கள். அது என்ன?
5. பற்கள் ஏராளம் இருந்தும் கடிக்க முடியாது. அது என்ன?
-வெ. சர்மிளா, ஏழாம் வகுப்பு,
இமாகுலேட் மெட்ரி குலேஷன் பள்ளி, திருவையாறு..