அன்னாசிப் பழத்தில் உப்புத் தடவி சாப்பிட்டிருப்பீர்கள்? ருசி மிக்க அன்னாசிப் பழம் பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருக்குமில்லையா? அந்த அன்னாசிப் பழத்தைக் களிமண் உதவியுடன் செய்து பார்த்து விளையாடலாமா?
தேவையான பொருள்கள்:
கடையில் கிடைக்கும் வண்ணக் களிமண், கத்தி , பச்சை வண்ண காகிதம், கத்தரி. (கத்தி, கத்தரிக்கோலை அம்மா, அப்பா உதவியுடன் பயன்படுத்தவும்)
செய்முறை:
1. மஞ்சள் நிறக் களிமண்ணை எலுமிச்சை அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
2. அதை உங்கள் கைகளில் வைத்து முட்டை போல நீள்வட்ட வடிவத்தில் உருட்டிக்கொள்ளுங்கள்.
3. அன்னாசிப் பழத்தில் கோடுகோடாக இருக்குமில்லையா? அதைப் படத்தில் காட்டியபடி கத்தியைக் கொண்டு களிமண் உருண்டையில் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகளை வரைந்துகொள்ளுங்கள்.
4. பச்சை வண்ணக் காகிதத்திலிருந்து, அன்னாசிப் பழத்தின் மேல் பகுதியில் காணப்படும் கொண்டை போன்ற வடிவத்தைச் செய்து, அதைக் கத்தத்ரிது வெட்டிக்கொள்ளுங்கள்.
5. அன்னாசிப் பழத்தின் மேல் பகுதியில் சிறிய துளையிட்டுக் கொண்டையைச் செருகிவிடுங்கள்.