மாயா பஜார்

நீங்களே செய்யலாம் : பம்பரமாகச் சுற்றுமே தீப்பெட்டி!

செய்திப்பிரிவு

மரக்கட்டையில் செய்யப்பட்ட பம்பரங்களை வாங்கி விளையாடியிருப்பீர்கள். அட்டையில்கூடப் பம்பரம் செய்து விளையாடலாம் தெரியுமா? அட்டைப் பம்பரத்தை இப்போது செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

காலி தீப்பெட்டி, ஒரு தீக்குச்சி, கத்தரிக்கோல்

எப்படிச் செய்வது?

1. தீப்பெட்டியின் உள் அட்டையை எடுத்து வீசி விடுங்கள். மேல் அட்டையை அழுத்தி மட்டமாக வைத்துக்கொள்ளுங்கள்.

2. படத்தில் காட்டியப்படி நான்கு பாகங்களாகப் பிரித்துக் கோடிட்டுக் கத்தரித்து நான்கு பட்டைகளாக்கிக்கொள்ளுங்கள்.

3. இப்போது ஒரு பட்டையைப் பிரித்து அதனுள் இன்னொரு பட்டையைச் செருகிக்கொள்ளுங்கள்.

4. இதேபோலப் படத்தில் காட்டியபடி மற்ற பட்டைகளையும் படத்தில் காட்டிய படி ஒவ்வொன்றாகச் செருகி ஒரு பின்னல் வலை போல ஆக்கிக்கொள்ளுங்கள்.

5. இந்தப் பின்னல் வலையை இறுக்கமாக உள் இழுத்து வைத்தால் நடுவில் ஒரு சிறு துளை ஏற்படும்.

6. அந்தத் துளைக்குள் தீக்குச்சியைச் செருகி, நகராத அளவுக்கு இறுக்குங்கள். இப்போது அட்டை பம்பரம் தயார்.

வழவழப்பான தரையில் அதை சுற்றிவிட்டால் பம்பரம் மிக அழகாகச் சுற்றும்.

SCROLL FOR NEXT