மாயா பஜார்

யோகா என்னவெல்லாம் கொடுக்கும்?

செய்திப்பிரிவு

குழந்தையிலிருந்தே நல்ல பழக்கங்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவே யோகா குறித்த விஷயங்களை அறிமுகம் செய்திருக்கிறோம். அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, யோகா ஆசிரியர்களிடம் முறையாகக் கற்றுக் கொண்ட பிறகே அவற்றைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். யோகாவை நீங்களாகவே நேரடியாகச் செய்யக் கூடாது.

# யோகா செய்வதால் உடல் உறுதியாவதோடு நன்றாக வளையவும் செய்யும்.

# பிரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.

# மன அமைதி கிடைக்கும்.

# கவனம் குவியும், சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

# உடலின் வலப் பக்கத்தையும் இடப் பக்கத்தையும் சமநிலையில் வைத்திருக்க யோகா உதவுகிறது.

# நல்ல தூக்கம் வரும்.

# அதிகாலை கண் விழிக்கும் பழக்கத்தை உண்டாக்குகிறது.

# யோகாவைத் தொடர்ந்து செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

# யோகாவை எளிதாகவும் விளையாட்டாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

SCROLL FOR NEXT