மாயா பஜார்

ஊர்ப் புதிர் 01: நாடு அதை நாடு

ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள். முழு குறிப்புகளையும் பயன்படுத்தி கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்து விட்டால் இரட்டைப் பாராட்டு. நீங்கள் தயாரா?

1. இந்த நாட்டின் பழைய பெயர் ஹெல்லாஸ்.

2. இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு.

3. மக்களாட்சியின் தொடக்கமே இங்குதான் என்கிறார்கள்.

4. ஐ.நா.சபையின் தொடக்க உறுப்பினர்களில் இந்த நாடும் ஒன்று.

5. புகைப்படத்திலுள்ள பிரபல கணித மேதை இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

6. இந்த நாட்டிலுள்ள சில நகரங்கள் பாட்ரஸ், தெஸ்ஸலோனிகி, ஓலோஸ்.

7. தேர்தலில் 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.

8. இங்கே நீங்கள் காண்பது இந்த நாட்டின் தேசியக் கொடி.

9. அலெக்ஸாண்டர் என்பதும் நினைவுக்கு வரும் நாடு.

10. ஒலிம்பிக்ஸின் தாயகம் இதுதான்.

SCROLL FOR NEXT