மாயா பஜார்

ஊர்ப் புதிர் 08: பெட்ரோல் வளமுள்ள நாடு!

ஜி.எஸ்.எஸ்

கீழே 10 குறிப்புகள் உள்ளன. இந்தக் குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்துவிட்டால் இரட்டைப் பாராட்டுகள்.

1. இங்குதான் மனிதன் முதலில் எழுதவும், படிக்கவும் செய்தான் என்பதால் இந்தப் பகுதியை நாகரிகத் தொட்டில் என்று கூறுவதுண்டு. முன்னொரு காலத்தில் மெசபடோமியா என்றும் அழைக்கப்பட்டது.

2. சுமேரிய, பாபிலோனிய நாகரிகங்கள் இங்கும் பரவின.

3. பெட்ரோலிய வளம் மிகுந்த நாடு

4. இங்கு பாயும் நதி டைக்ரிஸ்.

5. 1979 முதல் பல வருடங்கள் தொடர்ந்து இதன் ஜனாதிபதியாக இருந்தவரின் அரண்மனையைத்தான் ஒளிப்படத்தில் பார்க்கிறீர்கள்.

6. சிரியா, துருக்கி, ஈரான், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் ஆகியவை இதன் எல்லை நாடுகள்.

7. தென்மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடு இது.

8. அரேபியர்களும், குர்து இன மக்களும் மிக அதிக அளவில் இங்கு வாழ்கிறார்கள்.

9. குவைத்தை 1990-ல் இது ஆக்ரமித்தது.

10. அமெரிக்காவும் இந்த நாடும் கடும் எதிரிகள்

SCROLL FOR NEXT