மாயா பஜார்

புதிர் பக்கம்: 21/09/16

செய்திப்பிரிவு

வித்தியாசம் என்ன?

மேலே உள்ள இரண்டு படங்களுக்கும் இடையே ஐந்து வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்களேன்

நிழல் புதிர்

இங்கே விளையாடும் சிறுவர்களின் சரியான நிழல் எது என்பதைக் கண்டுபிடியுங்களேன்.

விடுகதை

1. இரண்டு குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள். அது என்ன?

2. சீப்பு உண்டு; தலை வார முடியாது. பூ உண்டு; மாலை கட்ட உதவாது. அது என்ன?

3. சிவப்புப் பெட்டியில் மஞ்சள் முத்துக்கள். அது என்ன?

4. உமி போலப் பூப்பூக்கும். சிமிழ் போலக் காய் காய்க்கும். அது என்ன?

5. அம்மா சேலையை மடிக்க முடியாது. அப்பா சில்லறையை எண்ண முடியாது. அது என்ன?

6. பச்சை வீட்டில் சிவப்பு வாசல். அது என்ன?

7. சின்னஞ்சிறு கதவுகள், செய்யாத கதவுகள், திறந்தாலும் மூடினாலும் சத்தம் போடாத கதவுகள். அது என்ன?

8. யாருமில்லாத காட்டில் அம்மாயி குடை பிடிக்கிறாள். அது என்ன?

9. நாக்கில்லாதவன் நல்லது சொல்லுவான். அது என்ன?

10. வளைந்து வளைந்து செல்பவன், விரும்பும் ஊரில் உன்னைச் சேர்ப்பான். அவன் யார்?

விடுகதை போட்டவர்: த. கருப்பசாமி, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சோழதாசன்பட்டி, அரவக்குறிச்சி, கரூர்.

வாகன சுடோகு

காலியாக உள்ள கட்டங்களை இந்த வாகனங்களைக் கொண்டு நிரப்புங்கள். ஆனால், ஒரே வாகனம் பக்கத்தில் வரக் கூடாது. ஒரே வரிசையில் எல்லா வாகனங்களும் வர வேண்டும்.

SCROLL FOR NEXT