மாயா பஜார்

மேஜிக் மேஜிக்: தானாகக் குதிக்கும் ரப்பர்!

செய்திப்பிரிவு

உங்கள் இஷ்டம் போலக் கை விரல்களில் ரப்பர் பேண்டை மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும். தானாகக் குதிக்கும் இந்த ரப்பர் பேண்டை மேஜிக் போலச் செய்து நீங்கள் அசத்தலாம்.

தேவையான பொருள்

நடுத்தரமான ரப்பர் பேண்ட்

மேஜிக்கை செய்வது எப்படி?

1. ஒரு ரப்பர் பேண்டை இரண்டாக மடித்து ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலில் மாட்டிக் கொள்ளுங்கள்.

2. மடக்கப்பட்டுள்ள விரல்களை நீட்டுங்கள். இப்போது ரப்பர் பேண்ட் தானாக மோதிர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் மாறிவிடும்.

இதுதான் குதிக்கும் ரப்பர் பேண்ட் மேஜிக். இந்த மேஜிக்கைப் பார்க்கும் உங்கள் நண்பர்கள் உங்கள் திறமையைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

மேஜிக் எப்படிச் சாத்தியம்?

1. படம் 1-ல் காட்டப்பட்டது போல ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலில் ரப்பரை மாட்டுவீர்கள் அல்லவா? ரப்பர் பேண்டை உள்பக்கமாக மடிக்கும்போது நான்கு விரல்களாலும் நன்றாகப் பற்றிகொள்ளுங்கள்.

2. படம் 3-ல் காட்டியது போலக் கட்டை விரலால் ரப்பர் பேண்டைப் பிடித்துக் கூடாது.

3. படம் 4-ல் உள்ளதுபோல ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலிலிருந்து ரப்பர் பேண்டை விடுவிக்கும்போது, உள்பக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கும் மோதிர விரல் மற்றும் சுண்டு விரலுக்கு ரப்பர் பேண்ட் மாறிவிடுகிறது. இதான் மேஜிக்கின் ரகசியம்.

இந்த மேஜிக்கை எளிதாகச் செய்துவிட முடியாது. கொஞ்சம் பயிற்சி எடுத்துச் செய்தால் அழகாகச் செய்துவிடலாம்.

SCROLL FOR NEXT