போகுது பார், ரயில் போகுது பார்.
புகையினைக் கக்கியே போகுது பார்.
‘குபுகுபு’ சத்தம் போடுது பார்.
‘கூக்கூக்’ என்றுமே கூவுது பார்.
தூரமும், நேரமும் குறைவது பார்.
துரிதமாய் எங்குமே ஓடுது பார்.
அறைஅறையான வண்டிகள் பார்.
அவற்றிலே மனிதர் செல்வது பார்.
‘ஸ்டேஷ’னில் எல்லாம் நிற்குது பார்.
சிவப்புக் கொடிக்கே அஞ்சுது பார்,
மலையைக் குடைந்தே செல்லுது பார்.
மையிருள் தன்னிலும் ஓடுது பார்.
பாலம் கடந்துமே போகுது பார்.
‘படபட, கடகட’ என்குது பார்.
பட்டண மாமா கடிதமெலாம்
பையிலே தூக்கி வருகுது பார்.
காசைக் கரியாய் ஆக்காமல்,
கரியைப் புகையாய் விடுவது பார்!