1. கிணற்றைச் சுற்றி வெள்ளைக்கல். அது என்ன?
2. திரி இல்லாத விளக்கு. அது என்ன?
3. கண்ணுண்டு பார்வையில்லை. அவன் யார்?
4. வாயிலிலே தோன்றி வாயிலே மறையும். அது என்ன?
5. பூவில் பிறக்கும் நாவில் இனிக்கும். அது என்ன?
6. பிடி இல்லாத குடை. அது என்ன?
7. கையில் தவழும்; பையில் உறங்கும். அது என்ன?
8. சிவப்பு நிறக் காளை நீருக்குள் பதுங்கும். அது என்ன?
9. உருவம் உண்டு; உயிர் இல்லை. அது என்ன?
10. அடிக்காத பிள்ளை, அலறித் துடிக்குது. அது என்ன?
விடுகதை போட்டவர்: ஜா. முகமது ஷகில்,
5-ம் வகுப்பு, ஹாஜி மீரா அகாடமி, ஈசநத்தம், கரூர்.