கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்துவிட்டால் இரட்டைப் பாராட்டு.
1. இந்த நாட்டின் தலைநகரின் பெயரில் நாட்டின் பெயரும் அடங்கியுள்ளது.
2. இங்கு ஒற்றைப் படை இலக்கம் கொண்ட பேருந்துகள் வடக்கு தெற்காகவும், இரட்டைப்படை இலக்கம் கொண்ட பேருந்துகள் கிழக்கு மேற்காகவும் செல்கின்றன.
3. இந்த நாட்டு உணவு என்று கூறப்படுவது ஸ்பானிஷ் மற்றும் இந்திய உணவின் கலவைதான்.
4. இங்கு வசிப்பவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே ரோமன் கத்தோலிக்கர்கள்.
5. அதிகாரபூர்வ மொழி ஸ்பானிஷ்.
6. ஸ்பெயினில் மட்டுமல்ல, இங்கும் எருதுச் சண்டை மிகவும் பிரபலம்.
7. ஒலிம்பிக் போட்டிகள் இந்த நாட்டில் நடத்தப்பட்டிருக்கின்றன.
8. வடஅமெரிக்காவின் மிகப் பழமையான நகரம் இதன் தலைநகரம்தான்.
9. அமெரிக்கா, இதன் அண்டை நாடு.
10. இந்த நாட்டின் கடைசி எழுத்து ‘கோ’.