சுண்டெலி, சுண்டெலி,
துறுதுறுத்த சுண்டெலி!
பண்டமெல்லாம் கெடுத்திடும்
பானை சட்டி உருட்டிடும்.
கண்ட கண்ட பொருளெலாம்
கடித்து நாசம் செய்திடும்.
சுண்டெலி, சுண்டெலி,
துறுதுறுத்த சுண்டெலி!
பையில் ஓட்டை போட்டிடும்
பணத்தை இழக்கச் செய்திடும்.
கையைக் காலை இரவிலே
கடித்து என்னை எழுப்பிடும்.
சுண்டெலி, சுண்டெலி
துறுதுறுத்த சுண்டெலி.