கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் திறமைசாலி.
1. இந்த நாட்டுக்குள் இன்னொரு நாடு உள்ளது.
2. ஒளிப்படத்தில் உள்ள பிரபல கால்பந்து வீரர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
3. யுனெஸ்கோவால் இங்குள்ள 40-க்கும் மேற்பட்ட பகுதிகள் உலக பாரம்பரிய பகுதிகளாக (World Heritage Sites) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
4. ஒளிப்படத்தில் உள்ள இசைக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது இந்த நாட்டில்தான்.
5. தட்டச்சுக் கருவியும் இந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
6. இந்த நாட்டில் உள்ள நீளமான நதியின் பெயர் இரண்டே ஆங்கில எழுத்துகளைக் கொண்டது.
7. இந்த நாட்டின் தேசிய மலர் அல்லி.
8. இதன் தேசியப் பறவையைத்தான் ஒளிப்படமாகப் பார்க்கிறீர்கள்.
9. மிதக்கும் நகரம் இங்குதான் உள்ளது.
10. பிரம்மாண்டமான சாம்ராஜ்யமாக இருந்தது ரோம சாம்ராஜ்யம். ஆனால், இப்போது ரோம் இதன் தலைநகரம்.