படப் புதிர்
பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறதா இந்த விலங்கு? இது ஒரு புதுமையான விலங்கு. இந்த விநோத விலங்குக்குள் நான்கு விலங்குகளின் உடல் பாகங்கள் ஒளிந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்களேன்...
1. தலை -----------------------
2. உடம்பு ----------------------
3. கால்கள் ---------------------
4. வால் -----------------------
கணிதப் புதிர்
மேலே உள்ள ராட்டினத்தின் பெட்டிகளில் எண்களைக் குறிக்கும் பொறுப்பை ஜெஸிகாவிடம் ஒப்படைத்திருந்தார்கள். பெட்டிகளுக்கு எண்களைக் குறிக்கும்போது, அவள் இரண்டு பெட்டிகளின் எண்களை எழுதாமல் விட்டுவிட்டாள். பெட்டிகளில் இடம்பெற்றுள்ள எண்களின் கூட்டுத்தொகை நூறு. விடுபட்ட எண்கள் ஐந்தின் மடங்குகள்.
அப்படியானால் அந்த எண்கள் எவை?
புதிர்க் கேள்வி
கீழே சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரு க்ளூ இருக்கிறது. எல்லாப் பதில்களிலும் குழந்தை என்ற சொல்லும் சேர்ந்தே வரும். இந்தக் க்ளுவை வைத்துக் கொண்டு கேள்விகளுக்குப் பதில் கூற முடியுமா?
1.அழ வள்ளியப்பாவை இப்படி அழைப்பதுண்டு.
2.திருஞான சம்பந்தரை இப்படி அழைப்பார்கள்.
3. உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கப் பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய், இதை ஒழிக்கவும் பாடுபட்டார்.
4.சிவகாசியில் இவர்கள் அதிகம் உண்டு என்பது வருத்தமான செய்தி.
5. இவர்கள் இருவரும் குணத்தால் ஒன்று என்று சொல்லுவார்கள்.
தொகுப்பு: மீனலோசனி பட்டாபிராமன்,
விருகம்பாக்கம், சென்னை.
ஆறு வித்தியாசங்கள் என்ன?
இரு படங்களுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
- வாசன்