இன்று உலகில் நிறைய இடங்களில் விலங்குகள் காட்சி சாலை உள்ளது. முதன்முதலில் எப்போது விலங்குகள் காட்சி சாலையை அமைத்தார்கள்? உலகில் முதன் முதலாக கி.மு.1150-ம் ஆண்டில் சீன அரசர் ஒருவர் விலங்குகள் காட்சி சாலையை அமைத்தார். அந்தச் சாலையில் பல வகை மான்கள், பறவைகள், மீன்கள் ஆகியவை இருந்தனவாம். ஆனால், அது அரசக் குடும்பத்தினர் மட்டுமே செல்லும் இடமாக இருந்தது.
முதன்முதலில் மக்களின் பார்வையிடுவதற்குத் திறந்துவிடப்பட்ட விலங்குகள் காட்சி சாலை பாரீஸில் உள்ளது. 1793-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் காட்சிச் சாலையில் இறந்த உயிரினங்களின் சடலங்கள் பதப்படுத்திக் காட்சிக்கு வைக்கப்பட்டன. கூடவே, உயிருள்ள விலங்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
உலகிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்கா லண்டனில் உள்ளது. 1829-ம் ஆண்டு திறக்கப்பட்ட ரீஜென்ட் பூங்காதான் அது. இதேபோல இன்னொரு பெரிய உயிரியல் பூங்கா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 1844-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகச் சிறந்த நேர்த்தியான விலங்குகள் காட்சி சாலை என்ற பெருமைக்குரியது இது.
தகவல் திரட்டியவர்: ஜா. சபியுல்லா, 8-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி