மாயா பஜார்

தென்னை மரம் - நீங்களே செய்யலாம்

செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள்

கெட்டியான கார்ட்போர்டு அட்டை, பழுப்பு நிற மெல்லிய கம்பி, பச்சை நிற அட்டை, கத்தரிக்கோல், பசை.

செய்முறை

1.14 செ.மீ நீளமும் 3 செ.மீ அகலமும் கொண்ட கார்ட்போர்டு அட்டையில் தென்னைமரத்தின் வடிவத்தை வரையவும். அதை கத்தரியால் வெட்டி எடுக்கவும்.

2.வெட்டிய பேப்பரை நீளவாக்கில் தென்னை மரக்கட்டை போல சுருட்டவும். அதன் மேல் பழுப்பு நிற கம்பியைச் சீரான இடைவெளியில் சுற்றவும்.

3.பச்சை நிற அட்டையில் வாழையிலை போல வரைந்து வெட்டவும். அதன் ஓரங்களைப் படத்தில் காட்டியதுபோல கத்தரிக்கவும். இப்போது தென்னங்கீற்று தயார். இதேபோல குறைந்தது 10 கீற்றுகளைச் செய்துகொள்ளவும்.

4.ஏற்கனவே செய்து வைத்திருக்கும் மரக்கட்டையின் முனையில் இந்த தென்னங்கீற்றுகளைப் பசை மூலம் ஒட்டவும்.

5.கெட்டியான அட்டையைச் சதுரமாக வெட்டி, அதன் மீது இந்தத் தென்னை மரத்தை ஒட்டவும். இதை உங்கள் ரைட்டிங் டேபிள் மீது வைத்துக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT