மாயா பஜார்

புதிர் பக்கம் - 01/02/2017

செய்திப்பிரிவு

கண்டுபிடி

மேலே உள்ள ரயில் எந்தெந்த ஊர்களின் வழியாகச் சொல்கிறது எனச் சொல்லுங்கள் பார்ப்போம்.

- வாசன்

வார்த்தைத் தேடல்

உங்களுக்குப் பிடித்த ஹீரோக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக் குவியலில் கார்ட்டூன் கதாபாத்திர பெயர்களாக மறைந்திருக்கின்றனர். அவற்றை மேலே, கீழே, வலது, இடது, குறுக்கில் தேடி வட்டமிடுங்கள்.

விடுகதை

1. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?

2. பெரிய வீட்டைக் காக்கும் குட்டி சிப்பாய். அது என்ன?

3. காலடியில் கிடக்கிறானே என்று இவனை உதைக்க முடியாது. அவன் யார்?

4. போட்டால் ஒரு மடங்கு, போட்டு எடுத்தால் இரு மடங்கு. அது என்ன?

5. கை பட்டதும் சிணுங்குவான். கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்?

6. கிட்ட இருக்குது பட்டணம்; எட்டித்தான் பார்க்க முடியவில்லை. அது என்ன?

7. நோயுமில்லை நொடியுமில்லை நாளலெல்லாம் மெலிகிறார். அவர் யார்?

8. குடிக்க உதவாது; சுவைக்க உதவும். அது என்ன?

9. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன்கள். அது என்ன?

10. கடிபடவும் செய்யாது; பிடிபடவும் செய்யாது. அது என்ன?

விடுகதை போட்டவர்: ச. தனுஷ்யா, 7-ம் வகுப்பு,
புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

SCROLL FOR NEXT