மாயா பஜார்

எளிமையான கப்பி

செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள்: நான்கு காலி கேன்கள், தடிமனான குச்சி, காலி அட்டைப் பெட்டி, பிளாஸ்டிக் நாண், கயிறு

செய்முறை:

1. ஒவ்வொரு காலி கேனின் மையப் பகுதியில் இரண்டு பக்கமும் துளை இடவும்.

2. பிளாஸ்டிக் நாணில் அவற்றைக் கோர்த்து நடுவில் தடிக்குச்சியை வைத்துச் சுற்றிக் கட்டவும். குச்சிதான் கப்பியைச் சுற்றும் குறுக்குக்கட்டையாகச் செயல்படுகிறது.

3. இந்த அமைப்பை உங்கள் வீட்டின் பால்கனிக் கம்பியில் பொருத்துங்கள்.

4. அட்டைப் பெட்டியின் நான்கு முனைகளிலும் துளையிட்டு, கயிற்றால் நான்கு முனைகளையும் இணைத்து, பிளாஸ்டிக் நாணால் இறுதியில் முடிச்சிட்டுக் கொள்ளவும்.

5. அட்டைப் பெட்டியில் கட்டப்பட்ட பிளாஸ்டிக் நாணின் இறுதி முனையை கப்பியைச் சுற்றிக் கட்டவும்.

6. உங்களுடைய வீட்டின் கீழ்த்தளத்தில் இருக்கும் நண்பர்களிடம் இருந்தும், தரைத்தளத்திலிருந்தும் பொருட்களை வாங்க, தெருவோர வியாபாரிகளிடமிருந்து காய்கறிகள் பெற இந்தக் கப்பியைப் பயன்படுத்திப் பாருங்கள். அப்பாவும், அம்மாவும் உங்களைப் பாராட்டி மகிழ்வார்கள்.

@2014 Amrita Bharati, Bharatiya Vidya Bhavan.

SCROLL FOR NEXT